நான் ஒரு குக்கிராமத்தில், சாதாரண ஏழை விவசாய குடும்ப்பத்தில் பிறந்தேன். ஆனால் விவசாயத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஏனென்றால் நான் எந்த வேலயும் நிலத்தில் செய்ததில்லை. காரணம், ஒன்று எனக்கு இஷ்டமில்லை. மேலும் இது குறித்து எனது பெற்றொருடைய பேச்சையும் சட்டையும் செய்ததில்லை. ஏதாவது வேலை சொன்னால் எனக்கு படிக்க வேண்டும், பரீட்சை உள்ளது என்று சாக்கு போக்கு சொல்லி விடுவேன். அவர்களும் பாவம் பையன் படிக்கட்டும் என்று விட்டு விடுவர். நான் சிறு வயதில் செய்ததெல்லாம் ஒன்றுதான், மட்டையைத் தூக்கிக் கொண்டு மற்ற பையன்களையும் கூட்டிக் கொண்டு கிரிக்கெட் விளையாடச் சென்று விடுவேன். இதனால் ஊரில் எனக்கும் எனது தம்பிக்கும் கெட்ட பெயர்.
இப்போது ஏதேதொ செய்து கடைசியில் software engineer ஆக உள்ளேன். என்னுடைய எண்ணங்கள்,
உலகத்தையப் பற்றிய பார்வை பெரும்பாலும் உலகத்துடன் ஒத்துப்போவதில்லை. அதற்க்கு காரணங்கள் பல. இங்கு என்னை ஒத்துப் போகும் சிலர் கிடைக்கலாம். இல்லை, எனக்கு வேறு ஒரு கோணத்தில்
உலகை பார்க்க உதவலாம்.